ஹாக்கி வீரர் தயான் சந்துக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுசேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்று நடைமுறையில் இருந்த விதியை மாற்றி, எந்தவொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மனித முயற்சியின் உயரிய அர்பணிப்புக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று சிலவருடங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய அரசு.
இந்த விருதுக்குப் பிரதமர் முடிவெடுத்து குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பார். விருது பெற்றவருக்கு குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 3 பேருக்கு (மட்டுமே) இந்த விருதை வழங்க முடியும்.

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ அதுபோல ஒருகாலத்தில் தன்னுடைய அசாத்திய திறமையால் ஹிட்லர் வரை பேசப்பட்டவர் தயான் சந்த். ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில், இந்தியா மூன்று முறை தங்கப் பதக்கம் பெற இவரின்றி வேறு யாரும் காரணம் கிடையாது. (அதில், ஒருமுறை கேப்டனாக இருந்தார்). சர்வதேசப் போட்டிகளில் ஆயிரம் கோல்கள் அடித்த சாதனையாளர். இவருடைய பிறந்தநாளான ஆகஸ்ட் 29, இந்திய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தத் தினத்தில்தான் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தயான் சந்த் பெயரில் ஒரு விருதும் வழங்கப்படுகிறது. 1905-ம் ஆண்டில் பிறந்தவர், தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.
தயான் சந்துக்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்கிற பெருமையை அடைந்தவர், சச்சின். 2013-ம் ஆண்டு பாரத ரத்னா விருது சச்சினுக்கு அறிவிக்கப்பட்டது. அவர், 40 வயதில் இளைய பாரத ரத்னாவானார்.
இந்நிலையில் தயான் சந்துக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து இந்தமுறையாவது எதிர்பார்த்த அறிவிப்பு நிகழுமா என்கிற ஆவல் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


