சாம்பியன்ஸ் டிராபி: 'இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து'
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
அரையிறுதியில் நாம் யாருடன் மோதுகிறோம் என்பது முக்கியமில்லை. லீக் போட்டிகள் மிகவும் கடினமானவை. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு எங்கள் முன் உள்ளது.
அந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுவதை பார்க்க அனைவரும் விரும்புகின்றனர். இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆனால், இறுதி ஆட்டத்தில் எந்த அணி வேண்டுமானாலும் எங்களுடன் மோதலாம்.
வெயில் அடிக்கும் நாள்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு இங்கிலாந்து அற்புதமான இடமாகும். கிரிக்கெட்டுக்கு இதைப் போன்ற வேறு சிறந்த இடம் கிடையாது. இங்குள்ள வானிலைகளும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவை என்பதால், ஒரு பேட்ஸ்மேனாக இருப்பவருக்கு அது சவாலாகும் என்று கோலி கூறினார்.
கோலியின் ஓவியத்துக்கு ரூ.2.4 கோடி
இந்திய கேப்டன் விராட் கோலியின் 10 ஆண்டு ஐபிஎல் பயணத்தை சித்திரிக்கும் ஓவியத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நாட்டவர் ரூ.2.4 கோடிக்கு வாங்கியுள்ளார்.
சாஷா ஜாஃப்ரே என்ற ஓவியர் வரைந்த அந்த ஓவியம், சமீபத்தில் விராட் கோலியின் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பூனம் குப்தா என்ற தொழிலதிபரால் வாங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...