இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் விளையாடவுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெறவுள்ளார். கெளதம் கம்பீர் ஏதாவதொரு டிஎன்பிஎல் அணியின் ஆலோசகராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் போட்டியினால் இளைஞர்கள் பலர் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். உள்ளூர் திறமைகளுக்கு மிகவும் உதவுகிறது. டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி ஒரு இளைஞரின் வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை. ஆலோசகராகப் பணியாற்ற அணிகளிடம் பேசிவருகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர் யூசுப் பதான் விளையாடவுள்ளார். டிஎன்பிஎல் ஏலத்தில் இடம்பெறக்கூடிய வீரர்களின் பட்டியலில் யூசுப் பதான் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அவர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
2012-ம் ஆண்டு இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய யூசுப் பதான், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் பியூஷ் சாவ்லா, அன்கீத் பாவ்னே, ராபின் பிஸ்ட் ஆகியோரும் டிஎன்பிஎல்-லில் பங்கேற்கவுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


