சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சாம்பியன்ஸ் டிராபி: சாம்பியன் அணிக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 29 கோடி...

News image
Updated On :17 ஜூன் 2017, 12:12 pm

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் எந்த அணி சாம்பியன் ஆனாலும் ரூ. 14 கோடியைப் பரிசாக அள்ளலாம்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 29 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 14 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 7 கோடியும் வழங்கப்படும்.

அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு தலா ரூ. 3 கோடியும், குரூப் சுற்றின் முடிவில் 3-ஆவது இடம்பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ. 58 லட்சமும், 4-ஆவது இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து, இலங்கை அணிகளுக்கு ரூ. 39 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.