ஆஸ்திரேலிய பாட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய பாட்மிண்டன் ஓபன் போட்டித் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.


சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய பாட்மிண்டன் ஓபன் போட்டித் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய பாட்மிண்டன் ஓபன் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் சீனாவின் சென் லாங்கும் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற நேர் செட்களில் சென் லாங்கை வீழ்த்தினார்.
இதற்கு முன்பாக சென் லாங்கிடம் ஸ்ரீகாந்த் ஐந்து முறை இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வாரம் இந்ததோனேசியா பேட்மிண்டன் ஓபன் போட்டியில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து, தற்பொழுது ஆஸ்திரேலிய ஓபனிலும் வெற்றி பெற்று ஸ்ரீகாந்த் சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...