தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசி 3 போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2017, 7:48 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசி 3 போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல் 2 ஆட்டங்களில் இடம் பெற்றிருந்த ஜோனாதன் கார்டர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களான கைல் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கான டிரினிடாட் மற்றும் டோபாகோ அணியின் கேப்டனாக இருக்கும் கைல் ஹோப், மேற்கிந்திய் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பரான ஷாய் ஹோப்பின் சகோதரர் ஆவார்.
அதேபோல் அம்ப்ரிஸ், வின்ட்வார்ட் ஐஸ்லேண்ட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக உள்ளார்.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்றுள்ள ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, ராஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லே நர்ஸ், கிரன் பாவெல், ரோவ்மேன் பாவெல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.