தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஸ்மிருதி மந்தனா.
Updated On :29 ஜூன் 2017, 8:44 pm

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் டெளன்டன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 42.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வென்றது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீராங்கனை ஹெய்லேய் மேத்தியூஸ் அதிகபட்சமாக 57 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 16, சேடின் நேஷன் 12, ஷானெல் டாலே 33 ரன்களில் வீழ்ந்தனர். ஃபெலிசியா வால்டர்ஸ், டீன்ட்ரா டாட்டின், மெரிஸா ஆகில்லெய்ரா, கைஷோனா நைட் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இவ்வாறாக மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. ஏஃபி ஃப்ளெட்சர் 36, அனிஷா முகமது 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் ஹர்மன் பிரீத் கெளர், பூனம் யாதவ், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எக்தா பீஷித் ஒரு விக்கெட் எடுத்தார்.
இந்தியா: அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை பூனம் ராவத் டக் அவுட் ஆக, அடுத்து வந்த தீப்தி சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையுடன் வந்த ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார். இந்நிலையில் கேப்டன் மிதாலி ராஜ் 46 ரன்களில் ஆட்டமிந்தார். ஸ்மிருதி மந்தனா, மோனா மேஷ்ராம் ஆகியோர் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். 42.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வென்றது இந்தியா. ஸ்மிருதி மந்தனா 108 பந்துகளுக்கு 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 106 ரன்களுடனும், மோனா 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா வெற்றி: இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய மகளிர் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.