புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

டெஸ்ட் தொடர்: ஸ்டார்க் விலகல்! ஆஸி. அணிக்கு நெருக்கடி!

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக ஸ்டார்க் நாடு திரும்புகிறார்...

News image
Updated On :10 மார்ச் 2017, 7:01 am

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் விலகியுள்ளார். 


இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் டேவிட் பீக்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க்குக்குக் காலில் காயம் ஏற்பட்டது. அது உடனே குணமாகவில்லை. தற்போது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்காகவும் காயத்திலிருந்து மீண்டு வருவதற்காகவும் ஸ்டார்க் நாடு திரும்புகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்க், அணியின் முக்கிய பந்துவீச்சாளர் என்பதால் அவருடைய விலகல் ஆஸி. அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 16-ம் தேதி ராஞ்சியில் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.