புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :10 மார்ச் 2017, 7:27 am

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக முரளி விஜய் இருந்தார். முதலில் மில்லர் கேப்டனாக இருந்தா. பிறகு பாதியில் அந்த வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. இருப்பினும் கடந்த ஐபிஎல்-லில் பஞ்சாப் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதையடுத்து தற்போது அந்த அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியில் மார்கன், டேரன் சாமி, ஆம்லா ஆகியோர் இருந்தும் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த ஐபிஎல்-லில் மூன்று ஆஸி. வீரர்கள் கேப்டனாக உள்ளார்கள். பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்லும் புணே அணிக்கும் ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டனாக உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.