ராஞ்சி: எதிர்வரும் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தே 2019 ஆண்டு உலகக்கோப்பை போட்டி வரை அவர் தொடர்வாரா என்பது தெரியும் என்று தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:
இப்போதைக்கு தோனியின் கவனம் முழுதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் இருக்கிறது. அதில் அவர் நன்றாகச் செயல்பட்டால் கண்டிப்பாக 2019 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பையில் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரருக்கு வயது ஏறிகொண்டிருக்கும் போது அதே ஸ்ட்ரைக் ரேட்டை தொடர்ந்து ஒரே அளவில் பராமரிப்பது கடினம். ஆனால் தோனியின் விஷயத்தில் அது வேறு மாதிரியாக உள்ளது. அவரது தனித்திறமையானது அவரை சிறப்பு வாய்ந்தவராக உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தன் உடல்தகுதியை நிலைநாட்ட அவர் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் ஆடினார்.
டெஸ்ட் போட்டிகளில் தன்னை நோக்கி யாரும்குற்றம் சாட்டும் முன்பு அவர் ஓய்வு முடிவை அறிவித்தார்,
இவ்வாறு கேஷவ் பானர்ஜி தெரிவித்தார். .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


