இந்திய அணி கேப்டன் கோலி காயத்திலிருந்து மீண்டுவருகிறார் என பிசிசிஐ கூறியுள்ளது.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் நேற்று, ஜடேஜா வீசிய 40-ஆவது ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்தார். அது பவுண்டரிக்கு செல்வதைத் தடுப்பதற்காக பாய்ந்து பீல்டிங் செய்தார் இந்திய கேப்டன் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் எழுவதற்கே சிரமப்பட்ட அவரை அணியின் முடநீக்கியல் நிபுணர் அழைத்துச் சென்றார். அதன்பிறகு சிறிது நேரம் அவருடைய தோள்பட்டையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகும்கூட கோலி பீல்டிங் செய்ய வரவில்லை. ரஹானே இந்திய அணி கேப்டனாக செயல்படுகிறார்.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், விராட் கோலி காயத்திலிருந்து தேறி வருகிறார். பெரிய பாதிப்புகள் இல்லை என்று தெரிய வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கோலிக்கு பேட்டிங்கில் பெரிய சிக்கல்கள் நேராது என்று அறியப்படுகிறது.
எனினும் இந்தத் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி கடுமையாகப் போராடி வரும் நிலையில், அணியின் முதுகெலும்பான கோலிக்கு காயம் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


