இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில், இன்றைய ஆட்டத்திலும் டிஆர்எஸ் சர்ச்சை வெளிப்பட்டது.
57.5-வது ஓவரில் 22 ரன்களுடன் புஜாரா ஓ’கீஃப்பின் பந்தை எதிர்கொண்டார். அப்போது பந்து காலில் பட்டதாக எல்பிடபிள்யூ கேட்டார் ஓ’கீஃப். ஆனால் அம்பயர் மறுத்தார். இதனால் டிஆர்எஸ் முறையீடு செய்தார் ஸ்மித். அதைப் பார்த்த மூன்றாவது அம்பயர், புஜாராவுக்குச் சாதகமான தீர்ப்பை அளித்தார்.
ஆனால் பந்து கால்காப்பில்தான் முதலில் பட்டது. இதன்பிறகுதான் அது பேட்டில் பட்டது என்கிற கருத்து ஒன்று பரவலாக உருவானது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பேட்டா அல்லது கால்காப்பா என்று கேள்வி எழுப்பியது. இதன்பிறகு நிலைத்து நின்று ஆடி சதம் எடுத்தார் புஜாரா.
அதேபோல அடுத்தப் பந்தில், லயன் பந்துவீச்சில் முரளி விஜய், அருகில் நின்றிருந்த வீரரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என அம்பயர் எண்ணி நாட் அவுட் எனத் தீர்ப்பளித்தார். ஆனால் அதுவும் ரீப்ளேக்களில் பேட்டில் பட்டது போல இருந்தது. ஆஸி. வீரர்கள் கைவசம் இருந்த 2 டிஆர்எஸ் முறையீடுகளையும் வீணடித்ததால் அவர்களால் இதை டிஆர்எஸ் கொண்டு முறையிடமுடியாமல் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


