ஊதிய உயர்வு அறிவித்தது பிசிசிஐ: கோலி, தோனி சம்பளம் ரூ.2 கோடியாக அதிகரிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது.


இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது.
இதன்படி கோலி, தோனி ஆகியோரின் ஊதியம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஊதிய பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெறவில்லை. ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை, பிசிசிஐ நிர்வாகக் குழு புதன்கிழமை வெளியிட்டது.
இதன்படி, ’ஏ' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியில் இருந்து, ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’பி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியாகவும், ’சி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான ஊதியம் ரூ.7.50 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான ஊதியம் ரூ.6 லட்சமாகவும், டி20 போட்டிக்கான ஊதியம் ரூ.3 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஊதியம், 2016 அக்டோபர் 1-ஆம் தேதி முதலாக அமல்படுத்தப்பட்டு வழங்கப்பட உள்ளன. 3 கிரேடுகளில் உள்ள 32 வீரர்களுக்கு இந்த ஊதிய உயர்வு, தேசிய தேர்வுக் குழுவுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.
ரெய்னா?: இதனிடையே, ஏ,பி,சி என எந்த கிரேடு வீரர்கள் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், ஹர்பஜன் சிங் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோரது பெயரும் எந்தப் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை.
2016 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய ஊதியம் அமலுக்கு வருவதால், அதற்கு முந்தைய போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் மற்றும் கம்பீரின் பெயர்கள் இதில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...