ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

விராட் கோலியை விமரிசனம் செய்த ஆஸி. ஊடகத்துக்கு அமிதாப் பச்சன் பதிலடி!

ஆஸி. ஊடகமான டெய்லி டெலிகிராஃப், விராட் கோலியைக் கடுமையாகச் சாடியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2017, 10:44 am

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் கோலி - ஸ்மித் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஆஸி. ஊடகமான டெய்லி டெலிகிராஃப், விராட் கோலியைக் கடுமையாகச் சாடியுள்ளது. அதில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் ஆகிவிட்டார். அதிபர் டிரம்ப் போல தனது தோல்விகளுக்கான காரணமாக ஊடகங்களைக் குறை சொல்கிறார்.

விராட் கோலியின் காயத்தை ஸ்மித் கேலி செய்யவில்லை. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆஸி. அணியிடம் பேசியுள்ளது. ஆனால் கோலி, வார்னர் அவுட் ஆனபோது ஸ்மித் தன்னைக் கிண்டலடித்ததாக எண்ணிக்கொண்டு ஸ்மித்தை அதே பாணியில் கேலி செய்துள்ளார்.  

கோலி இந்தத் தொடரில் மோசமாக விளையாடி வருகிறார். ஆனால் அவர் தொடர்புடைய சர்ச்சைகளால் கிரிக்கெட் ஆன்மா உயிரற்றதாக உள்ளது.

கிரிக்கெட்டில் ஒற்றுமையைப் பாதுகாக்க கேப்டன்கள் முயற்சிக்கவேண்டும். ஆனால் நூறு வருடங்களுக்கு மேலாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட்டின் அஸ்திவாரங்களில் ஒன்றை அழிப்பதாக கோலியின் நடவடிக்கைகள் உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஏமாற்றுபவர்களாகச் சித்தரித்த கோலிக்கு எவ்வித தண்டனையும் ஐசிசியால் அளிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ என யாரும் அவர்மீது கை வைக்கமுடியாது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் சமாதான உடன்படிக்கையை பிசிசிஐ மேற்கொண்டபோதும் கோலி தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெறவில்லை. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா போல கோலியும் எதிரணி மீதும் விளையாட்டின் மீதும் மதிப்பு, மரியாதை இல்லாமல் உள்ளார். இதன்மூலம் அவர் அணியையும் தன்னையும் ஊக்கப்படுத்திக்கொள்கிறார் என்று கடுமையாகச் சாடியுள்ளது.  

இதற்கு அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸி. ஊடகம் கோலியை விளையாட்டின் டொனால்ட் டிரம்ப் என்று விமரிசனம் செய்கின்றன. கோலி ஒரு வெற்றியாளர் மற்றும் அதிபர் என்று ஒப்புக்கொண்டதற்காக ஆஸி. ஊடகத்துக்கு நன்றி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.