கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் முகமது சமி?

வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என...
கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் முகமது சமி?
Updated on
1 min read

கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசலா மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது தர்மசாலா வந்துள்ள சமி, இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் கடைசி 2 டெஸ்டுகளில் சமி காயம் காரணமாக விளையாடவில்லை. ஆஸி.யுடனான தொடரிலும் இதுவரை விளையாடவில்லை. இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. ஆனால் அவர் விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்று தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். தர்மசாலாவில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவதாக சமி ட்வீட்டும் செய்துள்ளார். வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இஷாந்த் சர்மா இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவருக்குப் பதிலாக சமி அல்லது புவனேஷ்வர் குமார் அல்லது உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சமி என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com