
லண்டனில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, 2-ஆவது சுற்றில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஜோஷ்னா அந்த சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையும், எகிப்து நாட்டவருமான ரனீம் எல் வெலிலியை எதிர்கொண்டார். இதில், 8-11, 7-11, 7-11 என்ற செட் கணக்கில் ஜோஷ்னா தோல்வியைத் தழுவினார்.
முன்னதாக, ஜோஷ்னா தனது முதல் சுற்றில் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ரேச்சல் கிரின்ஹம்மை எதிர்கொண்டு, 11-6, 8-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
தற்போது ஜோஷ்னா வெளியேறியதை அடுத்து, பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், வீரர் செளரவ் கோஷல் ஆகியோர் தகுதிச்சுற்றிலேயே வெளியேறியது
குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.