அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எங்களுக்கு இப்போதும் 'டாப்-2' வாய்ப்பு இருக்கிறது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்கும் வாய்ப்பு எங்கள் அணிக்கு இப்போதும் இருக்கிறது என கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.

News image
Updated On :4 மே 2017, 7:16 pm

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்கும் வாய்ப்பு எங்கள் அணிக்கு இப்போதும் இருக்கிறது என கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய புணே அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோதும், அந்த அணியின் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி தனியொருவராக நின்று கொல்கத்தா பெளலர்களை பந்தாடினார். அவர் 52 பந்துகளில் 7 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, புணே 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்து வெற்ற கண்டது.
கொல்கத்தா அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோற்றுள்ள நிலையில், அந்த அணியின் கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது: எங்கள் அணியினர் இப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அடுத்ததாக சில முக்கிய ஆட்டங்களில் விளையாடவுள்ளோம். அதில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம். இப்போதும் முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்க முடியும் என நாங்கள் திடமாக நம்புகிறோம்.
புணேவுக்கு எதிரான ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. அதன்பிறகும் வலுவான ஸ்கோரை குவிக்க முயன்றோம். ஆனால் முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு வலுவான ஸ்கோரை குவிப்பது கடினம். நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.