அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஐபிஎல்: புணே அணி 148 ரன்கள்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் புணே அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :6 மே 2017, 12:12 pm

DIN

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் புணே அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாதில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இன்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரிபாதி 1 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஸ்மித் - ஸ்டோக்ஸ் ஜோடி வேகமாக ரன்கள் எடுக்க முயற்சி செய்தது. ஸ்டோக்ஸ் 25 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். எதிர்பாராதவிதமாக அடுத்த ஓவரில் ஸ்மித் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கிறிஸ்டியன் 4 ரன்களில் வீழ்ந்தார். கடைசியில் அதிரடியாக ஆடிய தோனி 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்களில் புணே அணி, 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் தரப்பில் கெளல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புணே அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், ஹைதராபாத் 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் புணே இரு வெற்றிகளையும், ஹைதராபாத் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.