

இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் தனது தரவரிசை வரலாற்றில் இந்த இடத்துக்கு வருவது இது முதல்முறையாகும்.
இந்த சீசனில் இதுவரை 4 பட்டங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீகாந்த், 2 இடங்கள் ஏற்றம் கண்டு 73,403 புள்ளிகளுடன் இந்த இடத்தை அடைந்துள்ளார். முதலிடத்தில் உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் அக்ùஸல்சன் நீடிக்கிறார்.
இதனிடையே, ஹெச்.எஸ்.பிரணாய் ஓரிடம் முன்னேறி, தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 11-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். எனினும், சாய் பிரணீத் ஓரிடம் கீழிறங்கி 16-ஆவது இடத்துக்கு வர, சமீர் வர்மா 18-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில், பி.வி.சிந்து தனது 2-ஆவது இடத்திலும், சாய்னா நெவால் 11-ஆவது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி இணை 4 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 2 இடங்கள் இறங்கி 25-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 16-ஆவது இடத்தில் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.