வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கனவுகள் நிஜமாகும்: இந்திய அணிக்குத் தேர்வான தமிழக வீரர் விஜய் சங்கர் மகிழ்ச்சி!

இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்...

News image
Updated On :21 நவம்பர் 2017, 12:29 pm

எழில்

இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து விஜய் சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

அனைவருடைய வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கனவுகள் நிஜமாகும் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

திருமணம் நடைபெறவுள்ளதால் கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். அதேபோல தனிப்பட்டக் காரணங்களுக்காக 2-வது டெஸ்டில் இருந்து மட்டும் ஷிகர் தவன் விலகியுள்ளார். 3-வது டெஸ்டில் இந்திய அணியுடன் தவன் இணைந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.