5-ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
நாக்பூரில் நடக்கும் 5-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. பின்னர் நடந்த 4-ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அணி வீரர்கள் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் ஷர்மா, ஆஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஆக்ஸர் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஃபால்க்னர், பேட் கம்மின்ஸ், நேதன் கௌடர் நைல், ஆடம் ஸைாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...