நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஹசிம் ஆம்லாவின் ‘ஆஹா.. அவுட்’ சாதனை! 

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டிங் நட்சத்திரமான ஹசிம் ஆம்லா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வினோதமான சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

News image
Updated On :1 அக்டோபர் 2017, 9:12 am

DIN

சென்னை: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டிங் நட்சத்திரமான ஹசிம் ஆம்லா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வினோதமான சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் உலகின் குறிப்பிடத்தக்க ரன் குவிப்பாளர்களில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவும் ஒருவர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், மிகக் குறைவான போட்டிகளில் 2000 ரன்கள், 3000 ரன்கள், 4,000 ரன்கள், 5000 ரன்கள், 7000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது.

தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழப்பதில் அவர் ஒரு புதிய வினோத சாதனையை படைத்துள்ளார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தின்போது, அவர் 137 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆம்லாவின் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தப்படும் 70 ஆயிரம் விக்கெட்டாகும். 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டின் 60 ஆயிரமாவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததும் ஆம்லாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல  கடந்த ஆண்டு டிசம்பரில், டெஸ்ட் போட்டியின் 10 ஆயிரமாவது எல்பிடபிள்யூ விக்கெட்டாக வீழ்ந்ததும் ஆம்லாதான்.

இப்படி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழப்பதில் அவர் ஒரு ‘சாதனை மன்னனாக’ இருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.