இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

டி20 தொடரிலிருந்து ஆஸி. கேப்டன் ஸ்மித் திடீர் விலகல்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெறுகிறது...

News image
Updated On :7 அக்டோபர் 2017, 6:04 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வெல்வதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் ஒரு நாள் தொடரில் படுதோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை வென்று ஆறுதல் தேடிக்கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸி. கேப்டன் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். தோள்பட்டையில் வலி ஏற்பட்டதையடுத்து அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. நேற்று அவர் எவ்வித பயிற்சியிலும் ஈடுபடவில்லை. இதையடுத்து காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து ஸ்மித் விலகியுள்ளார். 

ஸ்மித்துக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார். இன்றைய ராஞ்சி போட்டி உள்ளிட்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.