டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது குழந்தையின் மருத்துவச் செலவை ஏற்றார் ஹர்பஜன் சிங்!

எந்தவிதத்திலாவது இந்தக் குழந்தைக்கு என்னால் உதவமுடியுமா என்று தெரியப்படுத்துங்கள். அவளுடைய மருத்துவச் செலவுகளை...

News image
Updated On :24 அக்டோபர் 2017, 7:40 am

எழில்

4 வயது காவ்யா, டெல்லியில் உள்ள மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் ரூ. 3 லட்சம் வழங்கியுள்ளோம் என இங்கிலாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் அந்தக் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு ட்வீட் வெளியிட்டிருந்தது. 

இந்த ட்வீட்டுக்குப் பதில் அளித்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், எந்தவிதத்திலாவது இந்தக் குழந்தைக்கு என்னால் உதவமுடியுமா என்று தெரியப்படுத்துங்கள். அவளுடைய மருத்துவச் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு அந்தக் குழந்தை குறித்த விவரங்களை அளியுங்கள் என்று ட்வீட் வெளியிட்டார். 

இதையடுத்து அவருடைய குறிப்பிட்ட ட்வீட்டை ரசிகர்கள் அதிகமாகப் பகிர்ந்துவருகிறார்கள். ஹர்பஜனின் இந்த நல்ல உள்ளத்துக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு தாங்களும் ஹர்பஜனுடன் இணைந்து உதவுவதாகக் கூறியுள்ளார்கள்.

இதேபோல இன்னொரு குழந்தையின் மருத்துவச் செலவுக்கு உதவமுடியுமா என்று ஹர்பஜனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. விவரங்களை எனக்குத் தாருங்கள் என்று அதற்கும் உதவ முன்வந்துள்ளார் ஹர்பஜன் சிங். 

Plz let me know if I can be a help to this baby in any manner.. let me pay for her treatment.. plz provide me her details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.