புணே ஒருநாள் போட்டி: பிட்ச் வடிவமைப்பாளர் இடைநீக்கம்!
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புணேவில் தற்போது நடைபெற்று வருகிறது...


இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புணேவில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு புணே மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் பாண்டுரங் சல்கோன்கரை பிசிசிஐ இடைநீக்கம் செய்துள்ளது. பிட்ச் வடிவமைப்பில் முறைகேடு செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மைதானத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மும்பையைச் சேர்ந்த பிட்ச் வடிவமைப்பாளர் ஆடுகளம் தொடர்பான பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இரண்டு பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகத் தன்னால் ஆடுகளம் தயாரிக்கமுடியும் என்று சல்கோன்கர் பேட்டியளித்திருந்தார். மேலும் நிருபர்களிடம் ஆடுகளத்தின் தன்மை பற்றிய விவரங்களையும் அவர் அளித்துள்ளார். ஐசிசி விதிமுறைகளின்படி ஆடுகளம் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கக்கூடாது. இக்காரணங்களால் பிசிசிஐ சல்கோன்கரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் கிரிக்கெட் போட்டி தொடங்குவது குறித்த சந்தேகம் எழுந்தது. எனினும் ஆடுகளத்தைப் பார்வையிட்ட ஐசிசி நடுவர் ஆட்டம் தொடங்க அனுமதியளித்தார்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...