மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சூதாட்டக்காரர்களிடம் புணே பிட்ச் வடிவமைப்பாளர் உரையாடினாரா? இந்திய கிரிக்கெட் அதிர்ச்சி!

புணே ஒருநாள் போட்டிக்கான பிட்ச் வடிவமைப்பில் முறைகேடு செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து...

News image
Updated On :25 அக்டோபர் 2017, 12:15 pm

எழில்

சூதாட்டம், மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் சந்திக்காத பிரச்னைகளே இல்லை. இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் புணே கிரிக்கெட் மைதான வடிவமைப்பாளர், சூதாட்டக்காரர்கள் என அறிமுகமானவர்களிடம் பல விவரங்களை வெளியிட்டது கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புணேவில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் பிட்ச் வடிவமைப்பாளர் பாண்டுரங் சல்கோன்கரை பிசிசிஐ இடைநீக்கம் செய்தது. புணே ஒருநாள் போட்டிக்கான பிட்ச் வடிவமைப்பில் முறைகேடு செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மைதானத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மும்பையைச் சேர்ந்த பிட்ச் வடிவமைப்பாளர் புணே ஆடுகளம் தொடர்பான பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே ஊடகம் நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் இரண்டு பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகத் தன்னால் ஆடுகளம் தயாரிக்கமுடியும் என்று சல்கோன்கர் பேட்டியளித்திருந்தார். மேலும் நிருபர்களிடம் ஆடுகளத்தின் தன்மை பற்றிய விவரங்களையும் அவர் அளித்துள்ளார். ஐசிசி விதிமுறைகளின்படி ஆடுகளம் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கக்கூடாது. இக்காரணங்களால் பிசிசிஐ, சல்கோன்கரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

நடந்தது என்ன?

புணே போட்டிக்கான பிட்ச் வடிவமைப்பாளர் பாண்டுரங் சல்கோன்கரை இந்தியா டுடே ஊடகம் சார்பாக நிருபர்கள் சிலர் சந்தித்துள்ளார்கள். தங்களைச் சூதாட்டக்காரர்கள் என அவர்கள் அறிமுகம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்களிடம் சல்கோன்கர் ஏராளமான தகவல்களைத் தந்துள்ளார். வீடியோவில் இடம்பெற்றுள்ள உரையாடல்:

ஆடுகளம் நன்றாக உள்ளது. 337 ரன்கள் எடுக்கமுடியும் என்கிறார் சல்கோன்கர்.

அதற்கு நிருபர்கள், கண்டிப்பாக அவ்வளவு அடிக்கமுடியுமா என்று கேட்கிறார்கள்.

சல்கோன்கர், நிச்சயமாக. 337 ரன் இலக்கை எட்டவும் முடியும். அதைப் பற்றிய சந்தேகமே வேண்டாம் என்றார்.

இதுதவிர, பிட்சில் நிருபர்களை நடந்துபார்க்க அனுமதிக்கிறார் சல்கோன்கர். கால்களால் அழுத்திப் பார்க்கச் சொல்கிறார்.

இதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் நாங்கள் அனுமதிக்கிறோம். யாராவது இதுபற்றி கேட்டால், யாரும் பிட்ச் அருகே வரவில்லை என்று சொல்லிவிடுவேன் என்கிறார் சல்கோன்கர்.

நிருபர்கள்: 340 ரன்கள் என்பதை வைத்து நாங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆனால், அந்த வீரர் சாதகமான சூழலை எதிர்பார்க்கிறார்..

சல்கோன்கர்: நிச்சயம் செய்யமுடியும். நான்தான் சொல்லிவிட்டேனே...

வீடியோவில் இந்த உரையாடல் வெளியாகியுள்ளது. ஆனால் சல்கோன்கரிடம் பேசிய நிருபர்கள், தங்களைச் சூதாட்டக்காரர்களாக அறிமுகம் செய்வது போன்ற காட்சிகள் வீடியோவில் இல்லை. அதேபோன்று வீரர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. 

68 வயதான பாண்டுரங் சல்கோன்கர், 63 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 214 விக்கெட்டுகள் எடுத்தபோதும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1970களில் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். பிறகு பிட்ச் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தவர், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.