தோனி மகளைச் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ள கேரளக் கோயில் நிர்வாகம்!
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில், தோனியின் மகளை விழாவுக்கு...


அம்பலப்புழே உன்னிக் கண்ணனோடு நீ என்கிற மோகன்லால், ஜெயராம் பட மலையாளப் பாடலை தோனியின் 3 வயது மகள் ஷிவா பாடியதன் வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் வெளியானது. ஷிவா, மலையாளப் பாடலை அழகாகப் பாடியது ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றது.
இதையடுத்து கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில், தோனியின் மகளை விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளார்கள்.
ஷிவாவைக் கோயிலுக்கு அழைக்க முடிவு செய்தது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தோனிய மகள் பாடியதைக் கேட்டோம். இதனால் தோனியின் மகளைக் கோயில் திருவிழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலின் ஆலோசனைக் குழுத் தலைவர் கொட்டாரம் உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: கேரளக் குழந்தையைப் போல மலையாளப் பாடலை அற்புதமாகப் பாடியுள்ளார். எனவே ஜனவரி 14-ம் தேதி பந்த்ரண்டு கலாபம் விழாவுக்கு தோனியின் மகளை அழைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...