மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

டிரா ஆன ரஞ்சி போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர்! சதமடித்து அசத்தல்!

அனைத்து ரக போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான  டி20 தொடரில்...

News image
Updated On :27 அக்டோபர் 2017, 10:32 am

எழில்

ஷ்ரேயாஸ் ஐயர் என்றாலே அதிரடி ஆட்டம்தான். அது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரக போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான  டி20 தொடரில் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவர்களில் 374 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் பிருத்வி ஷா 123 ரன்கள் குவித்தார். தமிழகம் தரப்பில் சங்கர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தமிழகம் முதல் இன்னிங்ஸில் 142 ஓவர்களில் 450 ரன்கள் எடுத்தது. யோ மகேஷ் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திரஜித் 152 ரன்கள் குவித்தார். மும்பைத் தரப்பில் கோஹில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 56, ஹெர்வாத்கர் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த சிக்ஸ் மழை பொழிந்து தமிழகப் பந்துவீச்சைத் திணறடித்தார். முக்கியமாக அஸ்வினால் ஸ்ரேயாஸின் அதிரடியைக் கட்டுப்படுத்தவேமுடியவில்லை. 100 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த ஸ்ரேயாஸ், 9 சிக்ஸர்கள் அடித்து தன் திறமையை இன்று முழுதாக வெளிப்படுத்தினார். இதற்கு முன்பு ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 9 சிக்ஸர்கள் அடித்த மும்பை வீரர்கள் இருவர்தான். 1985-ல் ரவி சாஸ்திரி 13 சிக்ஸர்கள் அடித்தார். பிறகு 1996-ல் சச்சின் 9 சிக்ஸர்கள் அடித்தார். இப்போது ஸ்ரேயாஸும் இந்தப் பட்டியலில் இணைந்து 2-ம் இடம் பிடித்துள்ளார்.

138 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். அகில் ஹெர்வாத்கரும் அபாரமாக விளையாடி சதமெடுத்தார். அவர் 132 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி 95 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

வெற்றி தோல்வியின்றி இந்த ஆட்டம் முடிவடைந்ததால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகளும் மும்பை அணிக்கு 1 புள்ளியும் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.