கொழும்பு: வலது கை பேட்ஸ்மேனான இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி, விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் இடது கையில் பேட்டிங் செய்து சிக்ஸர் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக இருக்கும் விராட் கோலி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
களத்தில் விளையாடும் பொழுது கூட பெரும்பாலான சமயம் இடது கை பேட்ஸ்மேனாக திரும்பி நின்று 'ரிவர்ஸ் ஸ்வீப்' உள்ளிட்ட ஷாட்களை ஆட மாட்டார். வெகுசில சமயங்களில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்வது உண்டு.
தற்பொழுது இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான 4-வது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு இடைப்பட்ட ஓய்வு நாளில் கோலி விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் நடித்துள்ளார்.
இதற்கான ஒளிப்பதிவின் பொழுது இலங்கை தெரு வீதி ஒன்றில் ஜாலியாகி கிரிக்கெட் விளையாடும் பொழுது, விராட் கோலி இடது கை பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்யும் காட்சி ஒன்று வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோலி, 'இடது கை ஷாட் மிகவும் மோசமில்லை’’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


