விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இந்திய ஹாக்கி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்!

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் நீக்கம் செய்து ஹாக்கி இந்தியா சனிக்கிழமை நடவடிக்கை...

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 11:12 am

எழில்

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் நீக்கம் செய்து ஹாக்கி இந்தியா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரையில், அணியின் இயக்குநரான டேவிட் ஜான் பொறுப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஓல்ட்மன்ஸின் கீழ், அணியின் ஒட்டுமொத்த தகுதி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை மேம்பட்டுள்ளன. ஆனால், அணியின் செயல்பாடானது நிலைத்தன்மை உடையதாகவோ, இலக்கை அடையும் வகையிலோ இல்லை' என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹாலந்தைச் சேர்ந்த மரிஜ்னே நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மரிஜ்னே தற்போது இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக உள்ளார். தேசிய ஆண்கள் அணிக்கு அவர் இதுவரை பயிற்சி அளித்ததில்லை. இந்நிலையில், அவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரை பயிற்சியாளராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ ஹரேந்திரா சிங், இந்திய மகளிர் அணியின் உயர் செயல்திறன் சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.