விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: நாளை முதல் டிக்கெட் விற்பனை!

1200, ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை...

News image
Updated On :9 செப்டம்பர் 2017, 9:31 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை காலை 11 மணியளவில் தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ரூ.1200, ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த டிக்கெட்டுகளை நாளை முதல் மைதானத்தின் கவுன்டர்களில் பெறலாம். அதுதவிர, இணையத்தளத்தில், www.bookmyshow.com என்ற இணையத்தளத்திலும் பெறலாம். 

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.