6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நான் ஏன் தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறேன்?: விராட் கோலியின் அசத்தல் பதில்!

நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார்... 

News image
Updated On :9 செப்டம்பர் 2017, 7:24 am

எழில்

நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் விராட் கோலி கூறியதாவது:

முயற்சி செய்வதற்கு முன்பே நாம் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்கிறோம். பெரும்பாலானவர்கள் எழுபது சதவிகித முயற்சியின்போது நிறுத்திக்கொள்கிறீர்கள். நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். 

எனக்கு கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 10 வருடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் தற்போது கடுமையாக முயற்சி செய்கிறேன். கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு என் வாழ்க்கையில் நான் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆகவே வாய்ப்பு கிடைக்கும்போது சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்காக முழுமுயற்சி எடுக்கிறேன். சிறிய விஷயங்களில் - நான் என்ன சாப்பிடுகிறேன், எப்படிப் பயிற்சி எடுக்கிறேன் போன்றவற்றில் கவனம் எடுத்துக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.