விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை 53% உயர்ந்தது ஏன்?

ஜிஎஸ்டியால் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. மேலும் நகராட்சி வரியும் விதிக்கப்பட்டுள்ளதால்...

News image
Updated On :9 செப்டம்பர் 2017, 9:51 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. ஆனால் டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ரூ.1200, ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த டிக்கெட்டுகளை மைதானத்தின் கவுன்டர்களில் பெறலாம். அதுதவிர, இணையத்தளத்தில், www.bookmyshow.com என்ற இணையத்தளத்திலும் பெறலாம்.

இந்தப் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1200 என்பது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இதற்கு முன்பு சர்வதேசப் போட்டிகளின் டிக்கெட்டுகள் இந்தளவுக்கு உயர்த்தப்பட்டதில்லை. 2015-ல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றபோது குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 750 என இருந்தது. ஆனால் இந்தமுறை ரூ. 1200 ஆக குறைந்தபட்ச டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் கூறும்போது: ஜிஎஸ்டியால் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. மேலும் நகராட்சி வரியும் விதிக்கப்பட்டுள்ளதால் அதையும் டிக்கெட் கட்டணத்துடன் சேர்க்கவேண்டியுள்ளது. இலவசமாகத் தரப்படும் டிக்கெட்டுகளுக்கும் நகராட்சி வரி உண்டு. டிக்கெட் விலையுடன் ஜிஎஸ்டி, நகராட்சி வரியைச் சேர்த்ததால் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1200 ஆகியுள்ளது. ரூ. 750 + 28% ஜிஎஸ்டி, 25% நகராட்சி வரி என சேர்த்துதான் ரூ. 1200 ஆகியுள்ளது. இதனால் இந்தமுறை டிக்கெட் கட்டணம் 53% உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு மட்டும்தான் நகராட்சி வரி விதிக்கப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது என விளக்கம் தரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.