டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகள்: இந்திய அணி பட்டியல் அறிவிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

DIN

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திரும்பி உள்ளனர். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின் மற்றும் ரவிந்தர் ஜடேஜா ஆகியஇருவருக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்த இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரஹானே, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்டே, அக்ஸர் படேல், யஜூவேந்திரா ஷாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.