மும்பை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி மறுத்துள்ள விவகாரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக இருப்பவர் விராட் கோலி. பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகிறார். ஆனால் தற்பொழுது பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்த ஒப்பந்தம் ஒன்றை அவர் மறுத்துள்ள விவகாரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பொதுவாக காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை. எனவே தான் அருந்தாத ஒன்றை மற்றவர்களுக்கு விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மருத்துள்ளதாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்தார்.
முன்னதாக அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, 'என்னால் செய்ய முடியாத ஒன்றை பிற அணி வீரர்களிடம் வலியுறுத்த மாட்டேன்; முதலில் ஒன்றை நான் செய்ய முடியும் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே சகவீரர்களை அதைச் செய்யுமாறு கூறுவேன்' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.