மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குல்தீப் யாதவைச் சமாளிக்க ஆஸி. அணிக்கு உதவும் கேரள சுழற்பந்து வீச்சாளர்!

குல்தீப் பாணியில் ஜியாஸும் பந்துவீசுவதால் இந்தப் பயிற்சியின் மூலம் குல்தீப் மூலம் உருவாகும் சவால்களைச் சமாளிக்கமுடியும் என...

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 10:50 am

எழில்

மார்ச் மாதம் தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஆஸி. அணியினர் மறக்கமாட்டார்கள். முதல் நாளில் நான்கு முக்கிய ஆஸி. பேட்ஸ்மேன்களை ( டேவிட் வார்னர், க்ளென் மாக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்) வீழ்த்தி அந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெல்ல உதவி செய்தார் குல்தீப் யாதவ்.

இந்நிலையில் சென்னையில் ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் குல்தீப் யாதவின் பந்துவீச்சை ஆஸி. அணியினர் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்?

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சுக்கான ஆலோசகர் ஸ்ரீராமின் ஆலோசனையின்படி கேரள இடக்கை சுழற்பந்துவீச்சாளர் கேகே ஜியாஸ் (25) அழைக்கப்பட்டுள்ளார். ஜியாஸ், 2015-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றார். டெல்லி ஐபிஎல் அணியின் துணைப் பயிற்சியாளர் ஸ்ரீராம் என்பதால் அவருடைய அழைப்பின் பேரில் ஆஸி. வீரர்களுடனான வலைப்பயிற்சியில் ஜியாஸும் இணைந்துள்ளார்.

குல்தீப் பாணியில் ஜியாஸும் பந்துவீசுவதால் இந்தப் பயிற்சியின் மூலம் குல்தீப் மூலம் உருவாகும் சவால்களைச் சமாளிக்கமுடியும் என ஆஸி. அணியினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து ஸ்மித் கூறியதாவது: அப்போது முதல்முறையாக குல்தீப் யாதவின் பந்துவீச்சை எதிர்கொண்டோம். அதனால் தடுமாறினோம். ஆனால் இம்முறை ஏற்கெனவே பல வீரர்கள் ஐபிஎல்-லில் அவருடைய பந்துவீச்சில் விளையாடியுள்ளார்கள். அதேபோல இலங்கை தொடரிலும் அவர் பந்துவீச்சைக் கண்காணித்தோம். எனவே தற்போது, குல்தீப்பைப் போலவே பந்துவீசும் ஜியாஸ் உடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டுவருகிறோம். இந்தமுறை மேலும் சிறப்பாக அவர் பந்துவீச்சை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.