சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தியாவுக்கு எதிரான டி20: கம்மின்ஸ் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்.

News image
Updated On :22 செப்டம்பர் 2017, 7:29 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் கம்மின்ஸ் நாடு திரும்புகிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 1-ஆம் தேதி நாகபுரியில் நடைபெறுகிறது. அது முடிந்ததும் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் பங்கேற்கவுள்ளார். கம்மின்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார். 
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் டிரெவர் ஹான்ஸ் கூறுகையில், 'காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய கம்மின்ஸ், இந்த ஆண்டு தொடர்ச்சியாக ஏராளமான போட்டிகளில் விளையாடிவிட்டார். இப்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் இருந்தாலும், ஆஷஸ் தொடருக்கு முன்னதாக அவர் உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்வோடு இருப்பது அவசியமாகும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.