மனைவியின் கண் முன்னால் சாதனைகள் நிகழ்த்தும் ரோஹித் சர்மா!

மூன்றாவது ஒருநாள் இரட்டைச் சதம், அதிவேக டி20 சதம். இரண்டையும் மனைவியின் கண் முன்னால் நிகழ்த்தி அசத்தியுள்ளார் ரோஹித் சர்மா...
மனைவியின் கண் முன்னால் சாதனைகள் நிகழ்த்தும் ரோஹித் சர்மா!

மூன்றாவது ஒருநாள் இரட்டைச் சதம், அதிவேக டி20 சதம். இரண்டையும் மனைவியின் கண் முன்னால் நிகழ்த்தி அசத்தியுள்ளார் ரோஹித் சர்மா.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில், 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். தொடக்க வீரர்களான ரோஹித் - ராகுல் ஆகிய இருவரின் அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. அசத்தலாக ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சதமடித்தார். 12.4-ஆவது ஓவரில் ரோஹித்-ராகுல் ஜோடி பிரிந்தது. சமீரா வீசிய அந்த ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். 43 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை சிதறடித்திருந்த அவர், 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-ராகுல் ஜோடி 185 ரன்கள் குவித்தது. இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இந்தியா. 

இந்த ஆட்டத்தில் இந்தியா எட்டிய 260 ரன்களே, டி20 ஆட்டத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அத்துடன் சர்வதேச அளவில் இது 2-ஆவது அதிக ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் ஆஸ்திரேலியா 263 ரன்களுடன் உள்ளது. ரோஹித்-ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் முதல் ஜோடி எட்டியுள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித்-தவன் ஜோடி 75 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

35 பந்துகளில் சதமடித்தார் ரோஹித். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனையை (35 பந்துகள்) ரோஹித் சமன் செய்துள்ளார். இந்திய வீரர்களில் இத்தகைய அதிவேக சதமடித்த ஒரே வீரர் ரோஹித் ஆவார். இந்தப் போட்டியையும் காண ரோஹித் சர்மாவின் காதல் மனைவி ரித்திகா சஜ்டே நேரில் வந்திருந்தார். இந்தமுறை கணவரின் சதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் ரித்திகா. ஆனால் ரோஹித் இரட்டைச் சதம் எடுத்தபோது நடந்த கதையே வேறு.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம். ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.

ரோஹித் சர்மா-ரித்திகா சஜ்டே கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இந்த வருடம் 2-ஆவது திருமண நாள். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் களம் இறங்கிய ரோஹித், இரட்டை சதத்தைப் பதிவு செய்து தனது மனைவிக்கு பரிசாக அளித்தார். முன்னதாக, அவர் 200 ரன்களை நெருங்குவதற்குள் ரித்திகா பதற்றமானார். எனினும், ரோஹித் இலக்கை அடைந்தவுடன் அவர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

இரட்டை சதம் அடித்ததுடன், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்த நாளை மிகச் சிறந்த நாளாக கருதுகிறேன். இந்த நாள் (டிச. 13) எனக்கு திருமண நாளாகவும் அமைந்துவிட்டது. இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக எனது மனைவிக்கு அளிக்கிறேன் என்று ஆட்ட நாயகன் விருது வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இரட்டைச் சதம் எடுத்தபோது பதற்றத்துடன் இருந்த ரித்திகா, நேற்று இயல்பாகக் காணப்பட்டார். ரோஹித் அதிவேக சதமெடுத்தவுடன் கண்ணாடி அறைக்குள் இருந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கைத்தட்டி மகிழ்ந்தார். மனைவி சமீபத்தில் நேரில் கண்ட இரு ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா சாதனை செய்து அசத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com