உலக சாதனையைச் சமன் செய்த ரோஹித் சர்மா: அதிரடி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்!

டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனையை (35 பந்துகள்)...
உலக சாதனையைச் சமன் செய்த ரோஹித் சர்மா: அதிரடி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்!

35 பந்துகளில் சதம். டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனையை (35 பந்துகள்) ரோஹித் சமன் செய்துள்ளார். இந்திய வீரர்களில் இத்தகைய அதிவேக சதமடித்த ஒரே வீரர் ரோஹித் ஆவார்.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில், 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். தொடக்க வீரர்களான ரோஹித் - ராகுல் ஆகிய இருவரின் அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. அசத்தலாக ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சதமடித்தார். 12.4-ஆவது ஓவரில் ரோஹித்-ராகுல் ஜோடி பிரிந்தது. சமீரா வீசிய அந்த ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். 43 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை சிதறடித்திருந்த அவர், 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-ராகுல் ஜோடி 185 ரன்கள் குவித்தது. இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இந்தியா. 

இந்த ஆட்டத்தில் இந்தியா எட்டிய 260 ரன்களே, டி20 ஆட்டத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அத்துடன் சர்வதேச அளவில் இது 2-ஆவது அதிக ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் ஆஸ்திரேலியா 263 ரன்களுடன் உள்ளது. ரோஹித்-ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் முதல் ஜோடி எட்டியுள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித்-தவன் ஜோடி 75 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com