என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சனிக்கிழமை (ஏப்.7) மும்பை வாங்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 10:25 am IST

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சனிக்கிழமை (ஏப்.7) மும்பை வாங்கடே மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் டி-20 ஓவர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 
மொத்தம் 8 அணிகள் இருமுறை மோத வேண்டும், ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் புள்ளிகள் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவர். லீக் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் முதல் தகுதிப் போட்டியில் மோதும். இதில் தோல்வி அடையும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பாக மற்றொரு தகுதிப் போட்டியில் மோதலாம்.
3 மற்றும் 4-வது இடங்களைப் பெறும் அணிகள் எலிமினேட்டர் எனப்படும் போட்டியில் மோதும். இதில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியுடன் மோதும். இரண்டாம் தகுதிப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அணி வீரர்கள் அனைவரும் ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
இரண்டு ஆண்டுகள் தடை:
சூதாட்டப்புகார் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பிசிசிஐ இரண்டு ஆண்டுகள் தடை விதித்திருந்தது. அத்தடைக்காலம் முடிவடைந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளும் மீண்டும் இடம் பெறுகின்றன.
மும்பை வாங்கடே மைதானத்தில் தொடக்க ஆட்டத்துக்கு முன்பு, போட்டிகளின் தொடக்க விழா நடைபெறுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், வாணவேடிக்கைகளுடன் திருவிழா நடக்கிறது. சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடக்க விழா ஆரம்பித்து இரவு 7.15 மணிக்கு நிறைவடைகிறது. 90 நிமிடங்கள் நடைபெறும் தொடக்க விழாவில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் ஹிர்த்திக் ரோஷன், பர்ணீதி சோப்ரா, தமன்னா, வருண்தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், ஆகியோர் பங்கேற்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
முந்தைய ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்:
2008-ராஜஸ்தான் ராயல்ஸ், 2009-டெக்கான் சார்ஜர்ஸ், 2010, 2011-சென்னை சூப்பர் கிங்ஸ், 2012-கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2013-மும்பை இண்டியன்ஸ், 2014-கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2015-மும்பை இண்டியன்ஸ், 2016-ஐதராபாத் சன் ரைசர்ஸ், 2017-மும்பை இண்டியன்ஸ்.
அதிகபட்சமாக மும்பை இண்டியன்ஸ் 3 முறை பட்டத்தை வென்றுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி ஆண்டுத்தேர்வுகள், கல்லூரி தேர்வுகள் நிறைவடைந்து வரும் நிலையில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.