நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தங்கம் வென்றார் மிராபாய் சானு: பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்!

இந்திய வீராங்கனை மிராபாய் சானு, பளுதூக்குதல் போட்டியில், மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்... 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 12:21 pm IST

இந்திய வீராங்கனை மிராபாய் சானு, பளுதூக்குதல் போட்டியில், மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

மிராபாய் சானு, மொத்தமாக 196 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். 196 கிலோ எடையைத் தூக்கியதன் மூலமாக அவர் காமன்வெல்த் கேம்ஸ் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தற்போதைய போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார். கடந்த 2017-ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார் மிராபாய். இதையடுத்து காமன்வெல்த் கேம்ஸ் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ள இந்தியா, இன்றைய மதியம் 12 மணி நிலவரப்படி 2 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.