/

காமன்வெல்த் ஆடவர் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் கெளரவ்!

52 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் அயர்லாந்தின் பிரெண்டன் ஐர்வின்னைத் தோற்கடித்து தங்கம் வென்றார்... 

News image
Updated On :14 ஏப்ரல் 2018, 5:27 am

எழில்

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடவர் குத்துச்சண்டையில் இந்தியாவின் கெளரவ் சோலங்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 52 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் அயர்லாந்தின் பிரெண்டன் ஐர்வின்னைத் தோற்கடித்து தங்கம் வென்றார். 

10ம் நாளான இன்று இந்திய அணி இதுவரை 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3-ம் இடம் வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.