/

ஆடவர் ஹாக்கி: இங்கிலாந்திடம் தோற்று 4-ம் இடத்தை அடைந்த இந்திய அணி!

கடந்த 2 சீசன்களில் வெள்ளி வென்றிருந்த இந்திய அணி, அடுத்து வெண்கலப் பதக்கத்துக்காக இங்கிலாந்துடன் இன்று மோதியது... 

News image
Updated On :14 ஏப்ரல் 2018, 12:12 pm

எழில்

காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது அரையிறுதியில் 2-3 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது. 

இதையடுத்து கடந்த 2 சீசன்களில் வெள்ளி வென்றிருந்த இந்திய அணி, அடுத்து வெண்கலப் பதக்கத்துக்காக இங்கிலாந்துடன் இன்று மோதியது. 

வெண்கலமாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் இந்திய ஹாக்கி ரசிகர்களை ஏமாற்றியது இந்திய ஹாக்கி அணி. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இதனால் 4-ம் இடத்தையே அடைந்துள்ளது இந்திய ஹாக்கி அணி. இந்த ஆட்டத்தில் வென்ற இங்கிலாந்து, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 

ஆடவருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சதீஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் ஃபிரேஸரிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது இந்திய ஜோடி. இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் டோன்னா - கேமரான் ஜோடியிடம் தீபிகா பல்லிகல் - செளரவ் கோஷல் ஜோடி தோல்வியடைந்தது.

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.