மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

90 மீ தூரம் எறிவதே இலக்கு: நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் வகையில் 90 மீ தூரம் எறிவதே அடுத்த இலக்கு என காமன்வெல்த் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:12 am IST

ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் வகையில் 90 மீ தூரம் எறிவதே அடுத்த இலக்கு என காமன்வெல்த் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா (20) கடந்த 201-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஜெர்மனியில் பயிற்சி பெறும் நீரஜ் சோப்ரா கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் தங்கம் வென்ற ஓரே வீரர் ஆவார். 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
இந்நிலையில் புதன்கிழமை புதுதில்லி திரும்பிய சோப்ராவுக்கு இந்திய ராணுவம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெர்மனியில் மூன்று மாதங்களாக பயிற்சியாளர் வெர்னர் டேனியல்ஸிடம் பயிற்சி பெற்றேன். அங்கே நானே பயிற்சி எடுத்துக் கொண்டு, சுயமாக சமைத்து சாப்பிட்டேன். தங்கம் வெல்வதற்காக கடினமாக பயிற்சி பெற நேரிட்டது. எனது முக்கிய நோக்கம் 90 மீ தூரம் ஈட்டி எறிவதாகும். சர்வதேச அளவிலான இலக்கு அதுவாகும். அதை அடைந்தால் உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்லலாம்.
அடுத்து வரும் ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக்ஸ் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்துவேன். டயமண்ட் லீக் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளேன். பாட்டியாலாவில் பயிற்சி பெற உள்ளேன். ஆசிய அளவில் கத்தார், சீன தைபே, உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஈட்டி எறிதலில் சவாலாக இருப்பர் என்றார்.
ஜெர்மனியின் ஜோகன்னஸ் வெட்டர் (94.44), தாமஸ் ஆர்லர் (93.90) ஆகியோர் தலைசிறந்த ஈட்டி எறியும் வீரர்களாக உள்ளனர்.
நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரான வெர்னர் தான் 104.80 மீ தூரம் ஈட்டி எறிந்த ஓரே வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.