ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிசிசிஐ பரிந்துரை: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலி; துரோணாச்சார்யா விருதுக்கு ராகுல் டிராவிட்!

விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கான தயான்சந்த் விருதுக்கு கவாஸ்கர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது... 

News image
Updated On :26 ஏப்ரல் 2018, 6:50 am

எழில்

2018-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா, அர்ஜுனா, தயான்சந்த் விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது பிசிசிஐ. 

இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கோலி இரண்டாவது முறையாக இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2016-ல் கோலியைப் பரிந்துரை செய்தது பிசிசிஐ. 

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு ராகுல் டிராவிடின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்திய யு-19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டதால் அவரை இந்த விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது. 

விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கான தயான்சந்த் விருதுக்கு கவாஸ்கர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன், வீராங்கனை ஸ்மிருதி மந்தானா ஆகியோர் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.