‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

லார்ட்ஸ் டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாத நிலையில் ரத்து 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

புகைப்படம்: டிவிட்டர்/இங்கிலாந்து கிரிக்கெட்

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. 

இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. 

லார்ட்ஸ் மைதானத்தில் பெய்த கனமழையால் டாஸ் போடுவதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. மழை விடாது பெய்ததால் டாஸ் கூட போடாத நிலையில் உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. இருப்பினும் மழை விடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. அதனால், தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டது. 

தேநீர் இடைவேளை முடிந்த பிறகும் மழை விட்டபாடில்லை. அதனால், முதல் நாள் ஆட்டத்தை கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் கைவிட்டபோதிலும் மீதமுள்ள 4 நாள் ஆட்டங்கள் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு திட்டமிட்டபடி தொடங்கும். அதேசமயம் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணி வரை விளையாட்டை நீட்டித்துக்கொள்ளலாம்.

லார்ட்ஸ் மைதான வானிலைப்படி மீதமுள்ள 4 நாட்கள் அங்கு மழை இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.