கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் முன்னேற்றம், முகுருஸா வெளியேற்றம்

அமெரிக்காவின் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்பைன் முகுருஸா தோல்வியுற்று வெளியேறினார். விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


அமெரிக்காவின் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்பைன் முகுருஸா தோல்வியுற்று வெளியேறினார். விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தயாராகும் வகையில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன. இதில் மகளிர் பிரிவில் முகுருஸா 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் லெஸியா சுரேன்கோவிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 6-2 என டஜனா மரியாவை வென்றார். 
ஆடவர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அட்ரியன் மன்னாரினோவை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆட்டத்தின் இடையே வயிற்று வலியால் அவதிப்பட்ட ஜோகோவிச்சுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்தார். பின்னர் தொடர்ந்து ஆடி வென்றார்.
மரின் சிலிச் 6-7, 6-4, 6-4 என ருமேனியாவின் மாரியஸ்காப்பிலை வென்றார். மூன்றாம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரெவ் 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் டச்சு வீரர் ராபின் ஹேஸிடம் தோற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.