இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை: தினேஷ் கார்த்திக் குறித்து கம்பீர் ஆதங்கம்!

எனவே ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். அவருக்கு ஏராளமான வருடங்கள் உள்ளன...
இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை: தினேஷ் கார்த்திக் குறித்து கம்பீர் ஆதங்கம்!

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணி ஏற்கெனவே டி 20 தொடரை வென்று, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்ட்களில் இந்தியா தோல்வியடைந்தது. இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. வாழ்வா சாவா என்ற நிலையில் தொடரை கைப்பற்ற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என இங்கிலாந்துடன் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்டில் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்த் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. இதுகுறித்து கெளதம் கம்பீர் கூறியதாவது:

ரிஷப் பந்தை விளையாடவைக்க வேண்டும் என்கிற உந்துதல் எப்போதும் இருக்கும். ஆனால் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே இல்லை என்கிற நிலையில் உள்ளார். எனவே அவருக்குக் கூடுதலாக இன்னொரு வாய்ப்பளிக்கவேண்டும். அவர் ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். ஆனால் இங்கிலாந்தில் ரன்கள் எடுப்பது மிகவும் கடினம்.

இந்த டெஸ்டிலோ அல்லது அடுத்த டெஸ்டிலோ வாய்ப்பளிக்காவிட்டால் இனிமேல் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்கவேமுடியாமல் போகலாம். எனவே ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். அவருக்கு ஏராளமான வருடங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com