‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஹாக்கி: நடப்பு சாம்பியன் இந்திய ஆடவர் அணி அதிர்ச்சித் தோல்வி; மலேசியாவிடம் (6-7) வீழ்ந்தனர்

ஆசியப் போட்டி ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் மலேசியாவிடம் 6-7 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஆசியப் போட்டி ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் மலேசியாவிடம் 6-7 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறும் கனவு கலைந்தது.
உலகின் 5-ஆம் நிலையில் உள்ள இந்திய அணி, மீண்டும் தங்கம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேரடித் தகுதி பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் குழுப் பிரிவு ஆட்டங்களில் இந்திய அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று 76 கோல்கள் அடித்து உலக சாதனை புரிந்துள்ளது.
மீண்டும் தங்கம் வெல்லும் முனைப்பில் வியாழக்கிழமை அரையிறுதியில் மலேசியாவை எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீவிரமாக போராடின. இரு அணிகளும் தற்காப்பு அரணும் வலுவாக இருந்ததால், ஊடுருவி கோலடிக்க முடியவில்லை. மலேசிய வீரர்கள் பலமுறை இந்திய கோல்பகுதிக்கு வந்து கோலடிக்க முயன்று இந்தியாவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கினனர். எனினும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அற்புதமாக அவர்களின் முயற்சிகளை தடுத்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என கோலின்றி முடிந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் இந்தியா தாக்குதலை தீவிரப்படுத்தியது. முதலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கோலடித்தார்.
பின்னர் வருண் கோலடித்ததால் 2-0 என முன்னிலை பெற்றது. ஆனால் மலேசியாவின் பிட்ரி பதில் கோலடித்து முன்னிலையை குறைத்தது. அதே நேரத்தில் மலேசிய வீரர் ரேசி ரஹீம் மீண்டும் கோலடிக்க 2-2 என ஆட்டம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மன்பிரீத், தில்பீரித், சுனில் ஆகியோர் கோலடிக்கவில்லை. இந்திய தரப்பில் அக்ஷதீப், ஹர்மன்பிரீத், மன்பிரீத், கோலடித்தனர். இறுதியில் 6-7 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது இந்தியா.
கடந்த 2010-இல் குவாங்ஷுவூவில் நடந்த ஆசியப் போட்டியிலும் மலேசிய அணியிடம் கோல்டன் கோல் முறையில் இந்தியா தோல்வியைத் தழுவியது. வலிமை குறைந்த அணியாக கருதப்பட்ட மலேசியா, ஆட்டத்தின் அனைத்து முனைகளிலும் இந்தியாவுக்கு சவால் விடுத்து ஆடினர். 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறும் இந்தியாவின் கனவு கலைந்தது. வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அடுத்து ஆட வேண்டும்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு சவால் விடும் வகையில் ஆடிய இந்திய அணி தற்போது தன்னை விட  வலுகுறைந்த அணியிடம் தோல்வியுற்றது ஹாக்கி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நவம்பர் மாதம் ஓடிசாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் முயற்சியில் இது பின்விளைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.