தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

2-வது டெஸ்டிலிருந்து அஸ்வின், ரோஹித் சர்மா விலகல்!

அஸ்வின், ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்கள்..

News image
Updated On :13 டிசம்பர் 2018, 6:22 am

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக நாளை பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. 

இதற்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்கள். பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த பிருத்வி ஷா இன்னும் குணமாகாததால் 2-வது டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால் ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 13 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜடேஜா.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.